Home செய்திகள் மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி ஜிடிபியில் 2சதவீம் கூட கல்விக்காக நிதி ஒதுக்கப்படவில்லை – ஐபெட்டோ அகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி ஜிடிபியில் 2சதவீம் கூட கல்விக்காக நிதி ஒதுக்கப்படவில்லை – ஐபெட்டோ அகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

by mohan

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் கயத்தார் வட்டாரம் 3ம் ஆண்டு துவவக்க விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கனவு ஆசிரியர்கள் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஜேக்டோ – ஜியோ  போராட்டத்தில் ஈடுபட்ட கைதானவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஏ.கே.எஸ் திரையரங்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கோவில்பட்டி வட்டார தலைவர் அமல்ராஜ் ஞானசிங், கயத்தார் வட்டார துணை தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜசிங்பாஸ்கர், கோவில்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் கணேசன், தூத்துக்குடி கல்வி மாவட்ட செயலாளர் ஸ்டீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தார் வட்டார செயலாளர் சுடலைமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஐபெட்டோ) அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஐபெட்டோவின் மாநில தலைவர் நம்பராஜ், மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ், மாநில பொருளாளர் சந்திரசேகர், கோவில்பட்டி கல்வி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ஜீவானந்தம் உள்பட திரளான ஆசியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கயத்தார் வட்டார பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.

இதன் பின்னர் அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஐபெட்டோ) அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்:-மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தி ஜிடிபியில் 2சதவீம் கூட கல்விக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது, 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் 2 சதவீதம் கூட ஒதுக்கப்படவில்லை என்பது அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது என்றும்,மாநில அரசின் சார்பில் கடந்த 2ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட கல்வி துறை மானியக்கோரிக்கையில் வழக்கமான வரலாறுகள் தான் இடம் பெற்றன என்றும் வாழ்வாதர கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் 6 ஆயிரம் பேர் பதிவு உயர்வினை இழந்து இருக்கிறார்கள், அரசு ஊழியர்களும் இழந்து இருக்கிறார்கள். இது பற்றி ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் சொல்லவில்லை என்றும்,குறைந்தபட்ச திட்டங்களை கூட மானிய கோரிக்கையில் அறிவிக்கவில்லை, நடைபெறவுள்ள ஆசிரியர் கலந்தாய்வு எவ்வித ஒளிவுமறைவு இல்லமால் வெளிப்படையாக நடக்க வேண்டும்,இடங்களை மறைக்க கூடாது, அப்படி நடைபெற்றால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்,12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விரோதம் முதல்வருக்கு தேவையில்லை என்றும்,நாங்கள் உள் நோக்கத்திற்காக போராடவில்லை எங்கள் வாழ்வாதரத்திற்காக தான் போராடுகிறோம், 5லட்சம் பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை, அதனை அரசு அழைத்து பேச வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடைபெற்றதோ, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 18லட்சம் பேர் விரோதத்தினை பற்றி கவலை இல்லை என்று இந்த அரசு செயல்பட நினைந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் வெறுப்பு உணர்வு இருக்கும் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!