Home செய்திகள் விளாத்திகுளம் அருகே விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மேல்மாந்தை கண்மாயினை முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைத்தல் தொடர்பாக ஆயக்கட்டு விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பேசுகையில்:- “தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி மதிப்பிட்டில் புனரமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல்,மதகுகளை பழுதுபார்தல், மிகை நீர்வழித்தோடிகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய், மிகைநீர் வழித்தோடி கால்வாய்களை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.நமது மாவட்டத்தில் வைப்பாறு வடிநீர் கோட்டத்தில் 8 கண்மாய்கள் ரூ.3.71 கோடி மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது.கண்மாய் புனரமைப்பு பணிகள் அந்தந்த பகுதி ஆயக்கட்டு விவசாய சங்கங்களின் பங்களிப்பு 10 சதவிதத்துடன், அச்சங்கங்கள் மூலமே பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் ஆயக்கட்டு விவசாயிகளை நேரில் சந்தித்து பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையி;ல் ரூ.50 லட்சம் மதிப்பிற்கு மேல் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள உள்ள மேல்மாந்தை கண்மாய் ஆயக்கட்டு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.மேல்மாந்தை கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.85 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கண்மாயின் மண்கரை 8168 மீட்டர் முழுவதும் அகலப்படுத்தி பலப்படுத்த வேண்டும். கண்மாயில் உள்ள 3 மடைகளில் சிறு பழுதுகளையும் சரிசெய்ய வேண்டும். 2ம் எண் மடையில் ஷட்டர்கள் பொருத்த வேண்டும். மடையின் நீர் பிடிப்பு தொட்டி புதிதாக அமைக்க வேண்டும். மடையில் இருந்து செல்லும் நீர் இ.சி.ஆர். ரோட்டை கடந்துசெல்ல பக்க சுவர் அமைக்க வேண்டும்.

6450 மீட்டர் நீளமுள்ள வரத்து கால்வாய் முழுவதும் சீரமைத்து அதில் உள்ள சீமை கருவேல் புதர்களை அகற்றி தூர்வார வேண்டும். இப்பணிகளில் எவ்வித குறுக்கிடுகளும் இன்றி தரமான முறையில் வேகமாக முடிக்க வேண்டும். உங்களின் பாசன வசதிக்காக நடைபெறும் இப்பணிகளை நீங்களே மேற்கொள்வதால் இப்பணிகள் மிகவும் சிறப்பாக நடக்கும்.பொதுப்பணித் துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வரும் மழை காலத்திற்கு  முன்னதாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளி வளாகத்தில் சுற்றுச் சூழலை பாதுகக்கும் வகையில் மரக்கன்று நடவு செய்தார். மேலும், மேல்மாந்தை கண்மாய் பகுதிகளுக்கு விவசாயிகளுடன் நேரில் சென்று அங்கு செய்ய வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வைப்பாறு வடிநில கோட்ட பொது பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயல் பொறியாளர் குருசாமி, உதவி செயல்பொறியாளர் முருகன்,உதவி பொறியாளர் ராமரத்தினம், விளாத்திகுளம்; வட்டாட்சியர் ராஜ்குமார்,மேல்மாந்தை கண்மாய் பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முத்தையாசாமி, முனியாண்டி, ராக்கப்பன்,முனியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!