Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் டிரோன் கேமரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… காவல் ஆணையர் உத்தரவு… மக்களிடையே வரவேற்பு..

மதுரையில் டிரோன் கேமரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… காவல் ஆணையர் உத்தரவு… மக்களிடையே வரவேற்பு..

by ஆசிரியர்

இன்று 14.07.2020ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவுப்படி மதுரை மாநகரில் தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 3 டிரோன் கேமராக்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மதுரை மாநகர் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எளிதில் கிடைக்கவும் மக்கள் அவற்றை தவறாது கடைபிடிக்கவும், பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணித்து அவர்களை பாதுகாக்கவும் மதுரை மாநகர காவல் ஆணையர் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் கவனக் குறைவாகவும்,, அலட்சியமாகவும், விழிப்புணர்வு இல்லாமலும் சாலை மற்றும் வீதிகளில் நடமாடி வருகின்றீர்கள். அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று வைரஸ் தாக்குதலில் இருந்து மதுரை மாநகர மக்களை காப்பாற்றுவதற்காக காவல் ஆணையர். பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இந்த கொடிய நோய் தொற்றிலிருந்து அனைவரையும் முழுமையாக பாதுகாக்க முடியும். என காவல்துறையினர் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!