இராமநாதபுரத்தில் திமுகவில் இணைந்த பிற கட்சியினர்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 7 வது வார்டு ஷேக் தாவூது , 17 வது வார்டு பி.காளிதாஸ் ( ரயில் டிக்கெட் முதுநிலை பரிசோதகர் ஓய்வு) மற்றும் ஜெய் வீர சிங் ஆகியோர் பிற கட்சிகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், மண்டபம் பேரூராட்சி பணி நியமனக்குழு முன்னாள் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.ராஜகோபால், முன்னாள் கவுன்சிலர் இ. முபாரக் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் சகுபர் அலி, முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.