![IMG-20170312-WA0035[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170312-WA00351.jpg?resize=678%2C381&ssl=1)
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று 12.03.17 காலை 11 மணியளவில் இராமநாதபுரம் ஜனார்தன் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் தாசில்தார் தமீம் ராசாவுக்கும், அவருடன் பொறுப்பேற்றிருக்கும் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
You must be logged in to post a comment.