கீழக்கரையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு

கீழக்கரை நடுத்தெரு பெத்தம்மா கபுரடி பகுதியில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான குழந்தைகள் பள்ளியில் இன்று 02.03.17 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக குழந்தைகளுக்கான பிசியோ தெரபி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் இளஞ்செல்வி தலைமையில் மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளுக்கு பிசியோ தெரபி செயல்வழி முறைகளை, முறைப்படி செய்து காட்டினார். வகுப்புக்கான ஏற்பாடுகளை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் ஒருங்கிணைத்திருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இந்த பிசியோ தெரபி பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.