அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..

அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு டெங்கு பற்றிய எதிரி என்ற குறுந்தகடு மூலமாக மாணவ மாணவியர் க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டாக்டர். குமரகுருபரன் கூறுகையில் இராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் இந்த ஆண்டு இம்மாதம் வரை 65 நபர்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு தற்பொழுது முழுவதுமாக குணமடைந்து உள்ளனர் எனவும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர் கள் மூலமாக பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்ற மாவட்த்தை காட்டிலும் நம் மாவட்டத்தில் இல்லை எனவும் விளக்கினார்.

இதுவரை தன்மூலமாகவும் மருத்துவர்கள் மூலமாகவும் சுமார் 135 கல்லூரி மற்றும் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொசுக்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டது எனவும் வீடு தேடிவரும் சுகாதார பணியாளர்களை வீட்டுக்குள் அனுமதித்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை வேண்டிக் கொண்டார். மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் கூறும்போது வீடுகளில் அல்லது காலி இடங்களில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு பொது சுகாதார சட்டம் மூலம் ஆறுமாதம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துகுமார் கூறுகையில் ஒவ்வொரு வியாழன் அன்றும் பள்ளி மற்றும் அலுவலக அலுவலர்கள் கொசுப்புழு இல்லை என்ற சான்றிதழை மாவட்ட ஆட்சியர்க்கு சமர்ப்பிக்குமாறு துறை அலுவலர்களை வேண்டிக் கொண்டார்.  மேலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை பயன்படுத துமாறு வேண்டுகோள் வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் நடமாடும் டெங்கு விழிப்புணர்வு குடை மூலமாக பள்ளி மாணவ மாணவியர்க்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொது சுகாதார சட்டம் மீறியதற்காக நான்கு நபர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை  மீறும் பட்சத்தில் வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுவலசை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சசிகுமார் டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றி விவரித்தார். சுகாதார ஆய்வாளர் கேசவமூர்த்தி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்து விழிப்புணர்வு ஏற்பாடு செய்திருந்தார்.

பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருந்த நஜியா பள்ளி முதல்வர் அஜீசியா பானு மற்றும் ஆசிரியை ரேகா ஆகியோருக்கும், ஹாஜிமுகமது ஆதம் நர்சரி பள்ளி முதல்வர்  மெர்சில் ஜான்சிராணி மற்றும் ஆசிரியர் அல்அமீன் ஆகியோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக நஜியா பள்ளி ஆசிரியை நளினிதேவிநன்றி கூறினார்