20 கிலோ கஞ்சாவுடன் இரண்டு வாலிபர்கள் கைது…

இன்று 06.09.17 ஆம் தேதி இராமேஸ்வரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் மண்டபம் காவல் நிலைய காவலர்களுடன் இரமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அரசு பேருந்து வந்தது அரசு பேருந்தை சோதனை செய்தார்கள்.

பஸ்சில் பயணம் செய்த அலெக்ஸ்பாண்டி, வெள்ளைபாண்டி ஆகிய இரண்டு நபர்களிடமும் 20கிலோ கஞ்சா கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து. அவர்கள் இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்றார்கள்..