Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை கொரோனா தனிமை முகாமில் குஜராத் முதியவர் சாவு..

மதுரை கொரோனா தனிமை முகாமில் குஜராத் முதியவர் சாவு..

by ஆசிரியர்

இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி உன்ன உணவுக்கும் வழியின்றி தத்தளித்து வருகின்றனர். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் சிறப்பு ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணி அளவில் மதுரைக்கு வந்தது. அதில் 115 பயணிகள் இடம்பெற்றிருந்தனர்.

மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை அவனியாபுரம் சின்ன உடைப்பு முகாமுக்கு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சின்ன உடைப்பு முகாமில் தங்கியிருந்த 67 வயது முதியவருக்கு நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை செய்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வந்த அந்த முதியவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தாரா, அல்லது உடல்நலக் குறைவு இறந்தாரா? என்று தெரியவில்லை.

மதுரைமா நகரில் கொரோனா நோய் தொற்று காரணமாக அண்ணாநகர் முதியவர், மேலமாசி வீதி மூதாட்டி ஆகிய 2 பேர் ஏற்கனவே உயிரிழந்தது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!