Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இளம் தலைமுறை விரும்பும் இனிய கல்வி… கல்லூரி கட்டணமின்றி….

இளம் தலைமுறை விரும்பும் இனிய கல்வி… கல்லூரி கட்டணமின்றி….

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள் பொறியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இராமநாதபுரத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாம்  நினைவாக அப்துல் கலாம் நினைவு கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

அப்துல் கலாம் நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த கல்லூரிகளும் இணைந்து 01.06.2012 ஆம் ஆண்டு இலக்கு இலவச உயர்கல்வி திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்தனர்.

இராமநாதபுரத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான ஏழை மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பினை விரும்பிய கல்லூரிகளில் கல்லூரி கட்டணமின்றி இலவசமாக படிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் மூலமாக இராமநாதபுரத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் படிக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களை இலவசமாக படிக்க வைத்து வருகின்றோம்

இலவசமாக படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பினை விரும்பிய கல்லூரிகளில் தேர்வு செய்து கொள்ளலாம்

மேலும் இந்த கலந்தாய்வில் தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளும், தலைசிறந்த கல்வியாளர்களும் பங்கு பெறுவார்கள்.

இந்த கலந்தாய்வு  ஜூன் 1 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில்  விண்ணப்பிக்க கீழே உள்ள linkஐ click செய்யவும்..

https://forms.gle/gPJwrc6iA2kbrdC86

கலந்தாய்வு நடைபெறும் இடம்: பல் லக்கி பிளாசா GH.ரோடு, B1 போலீஸ் ஸ்டேஷன் எதிரில் ஐஸ்வர்யா ஹோட்டல் முதல் மாடி ராமநாதபுரம்

தொடர்புக்கு: 9952592489, 9944431193

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!