நிலக்கோட்டை அருகே கிறிஸ்துமஸ் விழா… புத்தாடைகள் வழங்கப்பட்டது…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முருகத்தூரன் பட்டியில் புனித ஜோசப் கருணை இல்லம் 18வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றை முன்னிட்டு வறியவர் களுக்கு இலவச ஆடை வழங்கும் விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

இவ்விழாவுக்கு பங்குத்தந்தை பால்ராஜ் தலைமை வகித்தார் இருதய சபை அருட்சகோதரர் தாமஸ் முன்னிலை வகித்தார்’ புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி ஸ்டீபன் வரவேற்றார் விவசாய பொறியாளர் வனராஜ், வழக்கறிஞர் கோகுல்நாத் கிறிஸ்தவ வன்னியர் சங்க தலைவர் ஜெயசுந்தர், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி துரைசேகரன் உள்பட பலர் பேசினர். விழாவில் 200 வறிய முதியவர் களுக்குஇலவச ஆடை வழங்கப்பட்டது 500 பேருக்கு அசைவ அன்னதானம் நடந்தது விழாவில் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் கருணை இல்ல நிர்வாகி ராணி நன்றி கூறினார்

செய்தி:- நிலக்கோட்டை :ராஜா