Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து.. அழகர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து.. அழகர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் , அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இவ்வாண்டு 03.05.2020 தொடங்கி நடைபெறும் சித்திரை பெருவிழாவில் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கியும் பின்னர் மண்டுக மகரிசிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் கொரோனோ நோய் பரவலை தடுக்கும் பொருட்டு, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டும், இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக நடைபெறவிருந்த முக்கிய வையவங்களான கள்ளழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை , வைகையாற்றில் எழுந்தருளல் , இராமராயர் மண்டகப்படி தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் அமி . வீரராகவப்பெருமாள் திருக்கோயில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டுக மக ரிசிக்கு மோட்சம் அளித்தல், இராமராயர் மண்டகப்படி தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை சென்று திரும்புவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே, அனைத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் இருக்கும் பொருட்டும், திருக்கோயில் பட்டாச்சாரியார்களின் கருத்துருவின்படி 08/05/2020 அன்று நிருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.tnhrce.gov.in என்ற இனையதாம். youtube மற்றும் முகநூல் மூலமாகவும் மேற்காணும் நிகழ்ச்சிகள் அனைத்தும் 08 . 05 . 2020 அன்று பாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்ப திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்த்து. கள்ளழகரின் அருள்பெற திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வேண்டுகிறோம் என திருக்கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!