மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அமிக்கா ஹோட்டலில் “சீன உணவு திருவிழா ” துவங்கியது.11நாட்கள் நடைபெறும் விழாவில் முழுக்க முழுக்க சீன உணவுகளே சமைக்கும் விழா.சீனாவின் புத்தாண்டு பிப்ரவரி மாததில் துவங்கும். அதனை சிறப்பிக்கும் வகையில் சீன “டிராகன் உணவுத் திருவிழா. “மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெறுகிறது.கடந்த 14ம் தேதி துவங்கி 24ம் தேதிவரை 11 நாட்கள் நடைபெறும்.சீன உணவுத்திரு விழாவில் சைவ, அசைவ உணவுகளில் 50 வகைகளும் மற்றும் திம் ஷம், சூப், மூன் கேக் வகைகள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.சீனாவின் பாரம்பரிய உணவான நீராவி மட்டன் பன் சிறப்பு உணவாக தயார் செய்யப்பட்டது.
இந்த நீராவி மட்டன் பன் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய உணவு வகையாகும்.மட்டன் கலந்து பன்னுடன் நீராவியின் மூலம் தயார் செய்து விருந்தினருக்கு வழங்குவது வழக்கம். சீனாவின் தேசிய உணவான ரோஸ்டடு (வறுத்த) வாத்து மற்றும் பிரைஸ்டு சிக்கன் போன்ற உணவுகள் விருந்தினர் உணவாக வழங்குவது வழக்கம்.மேலும் தனித்துவம் மிக்க சீன ஷான்டாங், செஸ்வான், ஹீனான், கான்டோனீஸ், ஃபு கெய்ன் போன்ற 5 வகை குஷேன் எனப்படும் தனித்துவ உணவுகள் தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.சீன பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்டது.மேலும் மருத்துவ குணமிக்க செரிமான சக்தி நிறைந்த வெற்றிலை, மூங்கில் தண்டு, லெமன் கிராஸ், பச்சை இஞ்சி கொண்டு வெற்றிலை சிக்கன் தயார் செய்யப்பட்டது.மதுரையில் முதன் முறையாக சீன உணவு வகைகளை கொண்டு நடைபெற்ற “டிராகன் உணவுத் திருவிழா ” வாடிக்கை யாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.