கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகே குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது

கீழக்கரை தாலுகா அலுவலகம், மலேரியா கிளினிக் அருகாமையில் அமைந்திருக்கும் குழந்தைகள் நல மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி இன்று 30.03.17 காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோரோக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வருகின்றனர்.

அதே போல் நாளைய தினமும் 31.03.17 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இங்கு குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.