இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி / ராமநாதபுரம் ரயில் நிலைய வளர்ச்சி தொடர்பாக இன்று (06.7.2019) மாலை ஆய்வு மேற்கொண்டார். வர்த்தக சங்க தலைவர் பா. ஜெகதீசன், செயலாளர் குப்தா கோவிந்தராஜன், பொருளாளர் செல்வராஜ், தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
ரயில் நிலையத்தில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு காவிரி குடிநீர் இணைப்பு, குடிநீர் சேமிப்பு தொட்டி அமைப்பு, பயணிகளுக்கு தடையில்லா குடிநீர் விநியோகம், கூடுதல் கழிப்பறைகள் அமைத்தல், பயணிகள் தங்குமிடம் விரிவாக்கம், டீ, சிற்றுண்டி உணவகம் அமைப்பு, பார்சல் புக்கிங் வசதி, பயணச்சீட்டு விநியோக கூடுதல் கவுன்டர் அமைத்தல், இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்தல் உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.