Home செய்திகள் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

by Askar

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

சென்னையில் 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேப்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஜெ.அன்பழகன் பேசியதாவது:-

பா.ஜனதா அரசு, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி மக்களை மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பிரித்து விட்டது. இந்த மசோதா நிறைவேற்ற அ.தி.மு.க. துணை போயிருக்கிறது.

ஈழத்தமிழர்களுக்காக யார் நீலிக்கண்ணீர் வடித்தவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

மத்திய அரசு மெஜாரிட்டியில் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மக்களுக்கு நன்மை செய்வது தான் ஜனநாயகம். பா.ஜனதா அரசுக்கு எடுபிடி அரசாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது. இன்னும் 15 அமாவாசைக்குத்தான் இந்த ஆட்சி இருக்கும். மக்கள் தலைவராக மு.க.ஸ்டாலின் வலம் வருகிறார். கட்டுப்பாட்டுடன் செயல்படும் இயக்கம் தி.மு.க

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் எம்.பி. சிறப்புரையாற்றினார். பகுதி செயலாளர் மதன்மோகன் தலைமை தாங்கினார். பங்கேற்று அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், சண்முகம் எம்.பி., கு.க.செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர்கள் ஏழுமலை, ஜெ.கருணாநிதி, அகஸ்டின் பாபு, காமராஜ், அன்பு துரை, மயிலை வேலு, கணபதி, ராஜன், பரமசிவம், ராமலிங்கம், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், உதயசூரியன், வெல்டிங் மணி, சோம சுந்தரம், பாபா சுரேஷ், சிற்றரசு, மாரி, தி.நகர் ராஜா, லயன் சக்திவேல், ஜானகிராமன், மேட்டுக் குப்பம், கமலக்கண்ணன், முத்துராமன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், தாயகம் கவி, கிரிராஜன், ஜின்னா, ஆயிரம் விளக்கு உசேன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் சார்பில் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் எம்.எல். ஏ.வுமான சுதர்சனம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், சிம்லா முத்து சோழன், டி.எஸ்.கே.மயூரி, பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் மாண்டியன், சுந்தர்ராஜன், புழல் நாராயணன், மனோகரன், தனியரசு, ஆறுமுகம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆதம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், நிர்வாகிகள் பாலவாக்கம் விசுவநாதன், ஆலந்தூர் குணாலன், சந்திரன், சைதை குணசேகரன், மகேஷ், கே.கே.நகர் தனசேகரன், இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கண்ணன், பெருங்குடி ரவி, எம்.எஸ்.இப்ராகிம், கிருஷ்ண மூர்த்தி துரைராஜ், சேகர், கபிலன், எம்.கே.ஏழுமலை, ஸ்ரீதர், சைதை சம்பத், பாஸ்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் இதயவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், மேடவாக்கம் ரவி, ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!