கீழக்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் சுவரொட்டி

புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து கண்டித்தும், தமிழகத்தின் வளங்களை அழித்து விவசாய நிலங்களை பாலைவனமாக மாற்றும் இந்தத் திட்டத்தினை தடுத்து நிறுத்த கோரியும், தெடர்ந்து மக்கள் விரோத திட்டங்களின் மூலம் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்தும் கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.