19500 சீமை கருவேல செடிகளை வேரறுத்து சாதனை படைத்த மாணவர் படை – ரெட் கிராஸ் அமைப்பினர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு அடித்தளமாக இருக்கும் சீமை கருவேல அரக்கனை இன்று மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேரோடு பிடுங்கி சாதனை படைத்துள்ளனர்.

19500 க்கும் மேற்பட்ட கருவேல மரக்கன்றுகளை ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் 51 பேர் பள்ளி வளாகத்திலிருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் வேருடன் அப்புறப்படுத்திக் கொண்டு வந்தனர்.

அவர்களுடன் பள்ளியின் நிர்வாகி கீழக்கரை K.R.D. கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் திருமதி P. சுகிபாலின் ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் துணைச் சேர்மன் எஸ். ஹாரூன் பொருளாளர் சி. குணசேகரன் கீழக்கரை இந்தியன் ரெட் கிராஸ் பொறுப்பாளர் அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம் நிர்வாக குழு உறுப்பினர் எஸ். சொக்கநாதன் ஆயுட்கால உறுப்பினர் T. அற்புதகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளியில் 2404 கருவேல் மரக்கன்றுகளை வேருடன் அகற்றிய ஏழாம் வகுப்பு மாணவி B. ஜனாதேவிக்கு ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் துணைச் சேர்மன் எஸ். ஹாரூன் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

1920 கருவேல் மரக்கன்றுகளை வேருடன் அகற்றிய எட்டாம் வகுப்பு மாணவி P. பரிமளா தேவி, 1270 கருவேல் மரக்கன்றுகளை வேருடன் அகற்றிய எட்டாம் வகுப்பு மாணவர் S. இஸ்மத்துல்லாகான் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பினர் சிறப்பு பரிசுகள் வழங்கினர்.

இது போன்ற ஊக்குவிப்புகள் மாணவர்கள் மத்தியில் சீமை கருவேல மர ஒழிப்பு குறித்து நல்லதொரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு நம் இராமநாதபுரம் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்ற வலை வகையாக அமையும் என்பதில் ஐயமில்லை. களமிறங்கிய மாணவ படையினருக்கும், ஊக்கமளித்து பள்ளி நிர்வாகத்தினருக்கும், ரெட் கிராஸ் அமைப்பினருக்கும் கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.