கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் எதிரொலி – சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு – பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கீழக்கரை நகரில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. நடுத் தெரு 12 வது வார்டு பகுதியில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு பகுதியில் இன்று 07.03.17 சுகாதார அதிகாரி செல்லக்கண்ணு மற்றும் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் ரஹ்மான் தலைமையில், 10 க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து குடும்ப தலைவிகளுக்கு நல்லறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஆனால் பல வீடுகள் பூட்டியே கிடக்கிறது. இன்னும் சில வீடுகளில் ஆய்வு செய்ய அனுமதிக்காததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே தங்கள் வீடுகளுக்கு ஆய்வுக்காக வரும் சுகாதார துறையினருக்கு தகுந்த ஒத்துழைப்பினை வழங்கி, டெங்குவை நம் நகரில் இருந்து ஒழிக்க உதவிடுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.