கீழக்கரை தாலுகா பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா உட்பட்ட வேளானூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக கீழக்கரை சரக குற்றவியல் காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற குற்றவியல்  சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள், சிறப்பு சார்பு ஆய்வாளர் பொண்து முனியாண்டி, யாசர், ஜெய்கணேஷ், உள்ளிட்ட காவலர்கள் டிராக்டரை சுற்றிவளைத்து சட்டவிரோதமான மணல் அள்ளி வந்த ஓட்டுனர் முத்துக்குமாரையும் பிடித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்தனர்.