
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி முகாம் அலுவலகத்தில்சர்வதேச உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.உலக அமைதியை வலியுறுத்தி சாரண சாரணியர் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.உலக அமைதியை வலியுறுத்தி கண்காட்சி நடைபெற்றது.உலக சமாதானத்திற்கான உறுதிமொழி சாரண சாரணியர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது.உலகசமாதானத்திற்காக சேவையாற்றிய மகாத்மா காந்தி அன்னை தெரசா நெல்சன் மண்டேலா தலாய் லாமா கோஃபி அண்ணன் மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்டோரின் அமைதிக்கான சேவையை பின்தொடர சாரண சாரண சாரணியர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.அமைதித் தூதுவர் களுக்கான சாரண சாரணியர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார் மற்றும் ஆசிரியர்கள் சாரண சாரணிய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை திருமதி ஷகிலா சாரண ஆசிரியை செய்திருந்தார்..
You must be logged in to post a comment.