அவனியாபுரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு.

மதுரை அவனியாபுரத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் நடமாடுவதாகவும் மற்றும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது போன்ற செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதனை அடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தினபோஸ் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க அவனியாபுரம், எச்.பி.காலனி, காமராஜர் நகர்,ஜே.பி.நகர், வள்ளனந்தபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவது மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..