கீழக்கரை நகர் நல இயக்கத்துக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை விருது.:

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வருடம் தோறும் சிறந்த சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு மாவட்டம் தோறும், அந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

அதன் வரிசையில் இந்த வருடம் 8வது முறை தொடர்ச்சியாக கீழக்கரை நகர் நல இயக்கம் சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்றது.  இவ்விருதை கீழக்கரை நகர் நல இயக்கம் பொருளாளர் ஹாஜா அனீஸ், மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள சுந்தர்ராஜன் மஹாலில் நடைபெற்ற விழாவில் பெற்று கொண்டார்.