Home செய்திகள் இராமநாதபுரத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி…

இராமநாதபுரத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி…

by ஆசிரியர்

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (26.02.2018) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இக்கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட அரசு விழாக்கள்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம், பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகை மற்றும்  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி  மகப்பேறு நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்கள், ஏழை , எளிய மக்களின்  நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்த  புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக துவக்கி வைத்த திட்டங்களான ரூ.1,000 உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு திட்டம், ஏழ்மை நிலை, கிராமப்புற பெண்களுக்கு அசீல் நாட்டுக்கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம், அம்மா வை-பை திட்டம் , உழவன் கைபேசி செயலி உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரசு விழாக்களின் புகைப்படங்கள், மாவட்டத்தில்  செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மக்கள் பார்வைக்காக இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி பிப்.26,27.02.2019 என 2 நாள்  நடைபெறுகிறது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, ராமநாதபுரம் வட்டாட்சியர் பொன்.கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள், ஜாமியா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ம.கயிலைச்செல்வம் (செய்தி), எம்.கேசவமூர்த்தி (விளம்பரம்), அரசு வழக்கறிஞர் கரு.நா.கருணாகரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com