Home செய்திகள்கீழக்கரை செய்திகள் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம் – இறுதி பாகம்..

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம் – இறுதி பாகம்..

by ஆசிரியர்

அ. முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர்.  அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

கடந்த வார தொடர்ச்சி….

**மறக்க முடியாத சம்பவம்**

பாலஸ்தீன அகதி

நாங்கள் தங்கியிருந்த லத்தாகியாவின் விடுதியின் வரவேற்பு அறையில் நான் என் மடிகணிணியில் தூதரகங்களுக்கான சில கடிதங்களை எழுதிக் கொண்டிருந்த போது பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். ஆசியாவின் பாலஸ்தீனப் பயணக்குழு தங்கியிருக்கும் விடுதி இது தானா என்று கேட்டார். ஆம் என்றதும் தான் பாலஸ்தீனத்தை சேர்ந்தவள், லத்தாக்கியாவின் பாலஸ்தீன அகதி முகாமில் பிறந்தது முதல் தன் கதையை மிக சுறுக்கமாக விறுவிறுவென கூறினார். பிறந்தது முதல் அவர் பாலஸ்தீனம் சென்றதில்லை, பாலஸ்தீனத்தை மீட்பது தொடர்பான சகல சமூக-அரசியல் இயக்கங்களில் அவர் மிகவும் விருப்பதுடன் பங்களித்து வருவது மட்டுமே தான் பாலஸ்தீனத்தை உணருவதற்கான வழிமுறையாகவும், தன் நிலத்தை நினைவுகளில் சுமப்பதற்கான ஒரே வழி என்றார். இந்த பகுதி முழுவதிலும் உள்ள பாலஸ்தீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அதன்பின் சென்றதே இல்லை. அவரது குடும்பம் 1948ல் இஸ்ரேலின் ரானுவத்தால் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒன்று. தன் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்தே அகதிகளாக இங்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிரியாவில் மட்டும் அல்லாது லெபணன், ஜோர்டன், ஏகிப்து நாடுகளிலும் பல அகதி முகாம்கள் உள்ளன. இந்த வளைகுடாவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாலஸ்தீனர்கள் இல்லாத நகரமே இல்லை எனலாம். நாடிழந்தவனர்களின் சோகம் ஒரு கருத்த மேகம் போல இந்த வளைகுடா முழுவதின் மீதும் ஒரு நிழல் போல் மிதந்து வருகிறது.

நாடிழந்தவர்களின் மனநிலை மிகவும் துயரமானது என்பதை அவர்களை சந்தித்த மாத்திரத்தில் ஒருவரால் உணரமுடியும். கடந்த 25 நாட்களாக நான் சிரியா, லெபணனில் உள்ள பாலஸ்தீன அகதி முகாம்களின் மக்களை சந்தித்து வருகிறேன். இந்த நாடுகள் அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து- வசதிகள் செய்து கொடுக்கும் போதிலும் அவர்களின் முகம் எல்லாம் நாடிழந்த தவிப்பு கவிந்து கிடக்கிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தங்களின் பள்ளி புத்தகப்பையில், புத்தகங்களில் பல பாலஸ்தீனச் சின்னங்களை வாரைந்துள்ளன. பாலஸ்தீனம் தொடர்பான பல பாடல்கள் இவர்களின் தேசிய கீதமாக உள்ளது. அந்த பெண் தான் ஒரு சாதாரன வேலையில் தான் உள்ளதாகவும், அதிகம் படிக்காததால் தன் சம்பளமும் குறைவானது தான் என கூறினார். இதை ஏன் என்னிடன் தெரிவிக்றார் என ஒரு கனம் குழம்பிப்போனேன். பேசிக் கொண்டே தன் கைபையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன், இது எதற்கு என்பதை முதலில் சொல்லுங்கள் என்றேன். கண்களில் நீர் ததும்ப இதனை நீங்கள் காசாவில் சந்திக்கும் ஏதேனும் ஒரு குடும்பத்திடம் குடுங்கள் என்றார். அழுது கொண்டே மெல்ல அங்கிருந்து கிளம்பினார். அவர் கிளம்பியதும் நானும் மெல்ல அவருடன் நடக்க தொடங்கினேன். எங்கள் இருவர் மத்தியிலான உறையாடலை மொழி பெயர்த்தவர் விடுதியில் இருந்துவிட்டா. நான் தெரு முனைவரை அவருடன் நடந்தேன். அங்கிருந்து சாலை கடற்கரை வழியாக அகதி முகாம் வரை சென்றது. நான் கடந்த முன்று நாட்களாக அந்த முகாமுக்கு சென்று வருவதால் அந்த சாலையும் பாதையும் எனக்கு பரிச்சயமாகி இருந்தது. அரபி எனக்கு தெரியாதது ஒரு குறையாகவே இல்லை. நாங்கள் அந்த நீண்ட கடற்கரை சாலையை கடந்தோம். என் தொலைபேசி ஒலித்ததால் நான் என் கோட் பையில் துளாவி அதை எடுத்தேன். அதற்குள் அவள் அருகில் இருந்த நெரிசலான தெருவுக்குள் சென்று மறைந்தார். நாடிழந்தவர்களின் தூதுவனாக என்னை உருமாற்றி அவள் மறைந்தாள்.

எகிப்து  பயணம்

இந்த மொத்த பயணத்தில் எங்களை மிக கேவலமாக நடத்தியது ஏகிப்து மட்டுமே. ஏகிப்தின் ராணுவம் மற்றும் காவல்துறையின் அதிகாரிகள் எங்களை குற்றவாளிகளை போலவே நடத்தினார்கள். எங்களை இப்படியாக நடத்தி தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு முறை விசுவாசத்தை நிருபித்தார்கள். எங்களின் பாஸ்போர்டுகளை பறிமுதல் செய்து விட்டு தரமறுத்துவிட்டார்கள். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி ஏராளமான  பணத்தை பறித்தார்கள். அதன் பின்மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி கெய்ரோ நோக்கி அழைத்து சென்றார்கள். போகும் வழியில் பெரும் விபத்தை சந்தித்து பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமணைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். எனக்கு முழங்காலில் ஒரு சிறிய காயம் மட்டுமே ஏறப்பட்டதால் தப்பித்தேன். இருப்பினும் நடுங்கும் குளிரில் நாங்கள் இரவை வெட்ட வெளியில் கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை. அதன் பின் நாங்கள் அந்த சாலையை மறித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த பின் தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன. கெய்ரோ விமானநிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து எங்கள் விமான நேரத்தில் தான் வெளியே விட்டாகள். இது தான் காசா செல்வர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என வந்தபின் தான் அறிந்து கொண்டேன். இருப்பினும் இந்த இடர்கள் எல்லாம் தான் பயணத்தை இன்னும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.

மாவிமாவ்ர்மா துருக்கி

துருக்கியின் வான், தியார்பகீர், காசியான் டெப் ஆகிய ஊர்களின் வழியே நாங்கள் சிரியா நோக்கி பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிகாட்டிதலும் உபசரிப்பும் செய்தது ப்ரீடம் ஃபளோட்டில்லா வை ஏற்பாடு செய்த ஐ.ஹெச்.ஹெச் ( IHH – Insani Yardim Vakfi)அமைப்பு. முழுக்க கூடைப்பந்து மைதானங்களின் தான் இரவு தங்கல். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு, பனி மழைகள், உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாத நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது. மாவிமாவர்மா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyüz (42), Ali Haydar Bengi (39), Ibrahim Bilgen (61), Furkan Dogan (19), Cevdet Kılıçlar (38), Cengiz Songür (47), Çetin Topçuoglu (53), Fahri Yaldız (43), and Necdet Yıldırım (32) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அழைகளித்தது, அதில் நாங்கள் இப்ராகிம் பிகென் அவர்களின் குடும்பத்தாரையும் அடக்கம் செய்யப்பட்ட மயாணக்கரைக்கும் சென்றது பெரும் நெகிழ்ச்சியான் அனுபவமாக இருந்தது. நான் ஏற்கனவே இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிதனமான தாக்குதலை பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், ஐ.ஹெச்.ஹெச் வெளியிட்ட விரிவான அறிக்கைகள் வாசித்திருக்கிறேன். இந்த பயணத்தில் ஒரு நாள் மாலை ஐ.ஹெச்.ஹெச் அலுவலகத்திறகு சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள், பிரசுரங்களையும் பெற்று வந்தேன். இந்த பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச்-ன் ஊழியர்கள், செயல்பாட்டளர்கள் மிக பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள். அவர்களின் சுறுசுறுப்பு, தெளிவு, வேலை செய்யும் முறை, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் ஒரு உத்வேகத்தை அளித்தது.

இஸ்லாமிய பெண்கள்….

மொத்த பயணமும் இஸ்லாமிய பெண்கள் குறித்தான பார்வையை மாற்றியது. பொதுவாக இந்திய ஊடகங்களில் ஈராண் குறித்த இறுக்கமான, பழமைவாத பார்வைகள் நிறையவே நம்மிடம் புழங்குகிறது. மின்னஞ்சல்களின் வரும் செய்திகல் என ஈராண் மட்டும் அல்லாது இஸ்லாம் குறித்து, இஸ்லாமிய நாடுகள் குறித்த எத்தனை அவதூறுகளை இங்கு ஹிந்துத்வாகாரர்கள் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்தனமாக புரிந்தது. ஈராணில் பெண்களுடன் பேசுவது குற்றம், பழகுவது குற்றம் என்கிற அளவில் தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால நாங்கள் அங்கு சென்ற போது காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள் தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு எங்களை வரவேற்றன. அங்கு கோஷங்கள் எழுப்பியது பெண்கள் தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஒவிய கண்காட்சி என எல்லாம் பிரமிக்க வைத்தது. எங்களுடன் 10க்கு மேற்பட்ட பெண் மொழிபெயர்பாளர்கள் ஈராணில் நாங்கள் இருந்த காலம் முழுவதும் இடன் இருந்தனர். நாம் ஈராணிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈராணின் மிக பெரிய மசுதிகளில் கூட அதனை பராமரிப்பவர்களா பெண்கள் தான் இருந்தனர். தெஹ்ராணிள் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சென்ற போது அங்கும் பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்ததால், நான் அங்கு இருக்கும் பல மாடிகளில் உள்ள படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றேன்.அத்தனை மாடிகளிலும் தொழிநுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்வபர்கள், செய்தி வாசிப்பாளர்கள், உதவி செய்பவர்கள் என அந்த தளம் முழுவதும் பெண்கள் தான். இப்படி ஒரு படப்பிடிப்பு தளம் என்பது நாம் இந்தியாவில் கூட யோசித்து பார்க்க இயலாது.

ஈராணின் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துறைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிக லாவகமாக உறையாடினார்கள்.ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்கள் இன்னொரு சந்தர்பத்தில் எழுத வேண்டும்.

விரைவில் அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம்-

 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com