செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தீவிபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ….

கீழக்கரை ஹமீதியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (28-11-2017) செஞ்சிலுவை சங்கம் சார்பாக தீவிபத்துக்கள் மற்றும் தற்காப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் செய்முறை விளக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவஹர் ஃபாரூக் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியின் சிறப்புரையை சுந்தரம்-இந்திய செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர், ராக்லாண்ட் மதுரம்-செஞ்சிலுவை சங்க மாநில செயலாளர், சாமிராஜ்-ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் சிராஜ்தீன், மஹ்பூப் பாதுஷா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியினை சையது சலீம் மற்றும் யாசர் அரஃபாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை தஸ்தகீர், சையது இபுராஹீம் மற்றும் அப்பாஸ் மந்திரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

1 Comment

Comments are closed.