வேடசந்தூர் அருகே கோர விபத்தில் இரண்டு பேர் பலி..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குங்குமக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் லந்தக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது தங்கச்சி அம்மாபட்டி என்ற இடத்தில் எதிரே மின்சார கம்பிகளை ஏற்றி கொண்டு வந்த டிராக்டர் மீது அதிவேகமாக மோதியதில் இரு சக்கரவாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த எரியோடு போலீசார் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் செய்தி அறிந்து வந்த உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்