58
கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் அரபுத்துறை சார்பாக 18.12.2018 இன்று உலக அரபு தினத்தை முன்னிட்டு “இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உலக வரலாறு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஹலிஃபத் ஜுஹைனா, BA அரபிக் முதலாமாண்டு மாணவி கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சில்மியா ராணி BA அரபிக் முதலாமாண்டு மாணவி வரவேற்புரையாற்றினார்.
அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்சு.மையா தலைமையுரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் கலீல் அஹ்மத், ஆலிம் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, “இஸ்லாமிய கண்ணோட்டத்தில் உலக வரலாறு” என்னும் தலைப்பில் உலகம் தோன்றியது முதல் தற்கால நிலை, இன்னும் எதிர்கால இலக்கு போன்றவற்றை தெளிவான முறையில் எடுத்துரைத்தார். இறுதியாக BA அரபிக் முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா ஹ“மைரா நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
You must be logged in to post a comment.