Home செய்திகள் ஓமலூர் அருகே நின்றுக்கொண்டிருந்த ரயிலின் மீது ஏறி விளையாடிய 10ஆம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

ஓமலூர் அருகே நின்றுக்கொண்டிருந்த ரயிலின் மீது ஏறி விளையாடிய 10ஆம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

by ஆசிரியர்

ஓமலூர் அருகே நின்றுக்கொண்டிருந்த ரயிலின் மீது ஏறி விளையாடிய 10ஆம் வகுப்பு மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பொம்மியம்பட்டி அடுத்த ஆண்டிநகர் பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற மாணவர், டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் ரயிலின் மீது ஏறி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் இளவரசன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓமலூர் அருகே உள்ள பொம்மியம்பட்டி ஊராட்சி ஆண்டிநகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் இவரது மகன் இளவரசன் இவர் பெரியவடகம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் பள்ளியில் இருந்து மாணவன் தனது வீட்டிற்கு வரும் வழியில் டேனிஷ்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான், அப்போது டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்திற்கும் , பொம்மிடி ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டாவளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காரணத்தால் சேலத்தில் இருந்து பொம்மிடி நோக்கி செல்லும் பெட்ரோல் ஏற்றி செல்லும் டேங்கர் ரயில் டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சென்று மாணவன் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயிலில் இருந்த ஏணி மீது ஏறி விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமான ரயிலுக்கு மேல் இருந்த மின்சாரம் தாக்கியதில் மாணவன் தூக்கி வீசப்பட்டான், இதில் மாணவனுக்கு உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓமலுhர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றான். இது குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் ரயில் மீது ஏறி விளையாடி மின்சாரம் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!