வாகனம் மோதி மேய்ப்பாளர் மற்றும் பல ஆடுகள் பலி..

இராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து, 39. இவரது மனைவி சேதுலட்சுமி, 35. நேற்று காலை இவர்கள் சத்திரக்குடி அருகே தபால் சாவடி சாலை ஓரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் முத்து உயிரிழந்தார். காயமடையடைந்த சேது லட்சுமி ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 7 ஆடுகள் பலியாகின. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்குமென கூறப்படுகிறது. இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.