கல்லுரி வாகனத்தில் டீசல் திருடிய வாலிபர்கள் கைது…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை காமராஜ் நகரில் குடியிருப்பவர் ராஜ் கிருஷ்னன் (50) இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பொறியல் கல்லூரியில் டிரைவராக பணிபுரிகிறார் தினமும் மாலையில் கல்லூரி மாணவர்களை இறக்கிவிட்டு அவருடைய வீட்டின் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு செல்வார்.

இந்நிலையில் நேற்று (13/03/2019) இரவு 11 மணி சுமாருக்கு சொகுசு காரில் வந்த மூவர் பேருந்தில் இருந்து டீசலை திருடிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த ராஜ் கிருஷ்னன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை அறிந்த திருடர்கள் தப்பி செல்ல காரில் ஏறினர். அதற்குள் பொதுமக்கள் பிடித்து 3 பேரையும் மகேந்திர மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரனையில் மூவரும் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த சிவாஜி மகன் முரளி (37), ஏசு மகன் கதிர்வேல் (22) முனியப்பன் மகன் நஞ்சப்பன் (21) என தெரிய வந்தது இவர்களை கைது செய்து ரிமான்ட் செய்த மகேந்திர மங்கலம் போலீசார் இவர்கள் வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்