வாலாஜாபேட்டை அருகே விபத்தில் தாய் பலி.. மகள் படுகாயம் ..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வீசி மோட்டூர் பகுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் மீது லாரி மோதியதில் தாய் சாரதா (60) சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணம் செய்த அவருடைய  மகள் மகேஸ்வரி (33) பலத்த காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வாலாஜா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்