வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் வாரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி ..

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் வாரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 193 மாணவ- மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயதேவரெட்டி தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அரக்கோணம் எம்எல்ஏ சு, ரவி காங்கேய நல்லூர் மற்றும் பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர்களக்கு வழங்கினார்.

கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. லோகநாதன் | மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு, ஒன்றிய செயலாளர் K.S. சுபாஷ் பகுதி செயலாளர் ஜனார்த்தன், தகவல் தொழிட்நுட்ப பிரிவு செயலாளர் ராகேஷ், மகளிர் அணிலட்சுமி, யசோதா வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் ரமேஷ் எற்பாட்டை செய்து இருந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

#Paid Promotion