கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட மூவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

மதுரை அக்கா சாலை, பிள்ளையார் கோவில் தெரு, தெற்குவாசல், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் வேலு என்பவருடைய மகன் விக்னேஷ் என்ற நரிவிக்னேஷ், 23/2019, 2. பாண்டியன் நகர், முத்துப்பட்டி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் சுட்டிதலைரவி என்பவருடைய மகன் முனீஸ்வரன் என்ற சுட்டிமுனீஸ் 23/2019, 3. கோகுல்நகர், ஒத்தவீடு, இ.பி.காலனி, பழங்காநத்தம், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் முனியாண்டி என்பவருடைய மகன் பிரபு என்ற பிள்ளையார் பிரபு, 25/2019, ஆகிய மூவரும் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (05.02.2019) “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்