யாரை பற்றியும் கவலையில்லை பிரதமருக்கும், முதல்வருக்கும்- பரமக்குடியில் ஸ்டாலின் ஆதங்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களில், ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களை தேடி வந்திருக்கிறேன். கிராமங்கள் தான் கோயில்கள் என மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில் அரசியல் பிரதிநிதிகள் கிராமத்தில் இருந்து தான் தங்கள் அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். வாக்குச் சீட்டு முறை மாறி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கொண்டு வரப்பட்டதால் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் மாற்றங்கள் ஏற்பட்டன. தமிழகத்தில் 12,617 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கிராம மக்களை சந்தித்து வருகிறேன். பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் அனைத்து ஊராட்சி மக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஓராண்டு காலமாக எம்எல்ஏ இல்லை. தமிழகத்தில்18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட மூன்று இடங்களிலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயம் திமுகவிற்கு வாக்களிப்பர்” பேசினார்.

வேந்தோணி ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் பெண்கள் கூறியதாவது: காவிரி குடிநீர் முறையாத விநியோகம் செய்யப்படுவதில்லை. பூரண மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்களில் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெற்று கொண்டார். அவர் பதிலளித்து பேசுகையில், நீங்கள் கொடுத்த அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பரிந்துரையில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக நடைமுறை படுத்தப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் சென்று அடைய நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை நிலை கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என உறுதி அளித்தார். தற்போதைய கொலை குற்ற முதல்வரும், மோடியும் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் வரும் தேர்தல் நிச்சயம் ஒரு பாடம் கற்பிக்கும் என்றார்.

மேலும் திமுக ஆட்சி மீண்டும் அமையும்போது தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஜனார்த்தனம் தலைமையில் இக்கோரிக்கை தொடர்பாக விரிவாக விசாரணை அறிக்கை அளிக்க ஒரு நபர் கமிட்டி அமைத்து 2011ல் கலைஞர் உத்தரவிட்டார். தமிழகத்தில் உள்ள உட்பிரிவு ஜாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட திமுக ஆட்சி அமையும் போது நிச்சயம் அதற்கான முயற்சி மேற்கொண்டு நிறைவேற்றி தரப்படும். தற்போதைய அதிமுக அரசு மக்களிடம் வசூலித்த வரிகளையும், கொள்ளையடித்த பணத்தையும் எம்எல்ஏ.,களுக்கு ஆட்சியை தக்க வைத்துள்ளனர் எனவும் பேசினார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டத்தில் ஸ்டாலினுக்கு வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் உ.திசை வீரன், கே.முருகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

#Paid Promotion