
சிவகங்கை மற்றும் திருச்சியில் அமாவாசையையொட்டி .காவிரி வைகை கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னோர்களுக்கு,
தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது எனவும் கூறினார். இதேபோல், மதுரை மாவட்டம் திருவேடகம் வைகை ஆற்றங்கரையிலும், ஆடி அமாவாசையன்று பொதுமக்கள் கூடக்கூடாது எனவும், போலீஸார் எச்சரிகை அடங்கிய பதாதகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.
இதேபோல், சிவகங்கை மாவட்டம், திருபுவனத்திலும் வைகை ஆற்றில் தர்ப்பணங்கள் செய்யக் கூடாது என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்கள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.