Home செய்திகள்உலக செய்திகள் அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய, நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1967).

அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய, நோபல் பரிசு பெற்ற சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 18, 1967).

by mohan

சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் (Sir John Douglas Cockcroft) மே 27, 1897ல் யோர்க்சயர், இங்கிலாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இராணுவத்தில் மேற்கு முனையில் பங்காற்றினார். கொக்ரொஃப்ட் மான்செஸ்டர் நொழிநுட்பக் கல்லூரியில் மின்பொறியியல் படித்தார். பின்னர் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிட்ச் சென் ஜோன்சு கல்லூரியில் படித்தார். 1924 ல் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு தனது கவென்டிசு ஆய்வுகூடத்தில் கொக்ரொஃப்டை ஆய்வு மாணவராகச் சேர்த்துக் கொண்டார். 1928ல் ரூதர்போர்டின் மேற்பார்வையில் கொக்ரொஃப்ட் தனது முனைவர் ஆய்வை முடித்தார். இக்காலகட்டத்தில் இவர் உருசிய இயற்பியலாளர் பீட்டர் காப்பித்சாவின் உதவியாளராகப் பணியாற்றினார். காப்பித்சா மிகக் குறைந்த வெப்பநிலைகளில் காந்தப் புலங்களின் இயற்பியல் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். கொக்க்ரொஃப்ட் இவருக்கு ஹீலியம் திரவமாக்கிகளை உருவாக்க உதவி புரிந்தார்.

கொக்ரொஃப்ட் புரோட்டான்கள் 300,000 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடன் போரான் அணுக்கருவை ஊடுருவ வல்லது எனக் கண்டுபிடித்தார். கொக்ரொஃப்டும் வால்ட்டனும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமது வேகமுடுக்கியை உருவாக்குவதற்கு உழைத்தனர். இதற்கென ஒரு மின்மாற்றி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 1932ல் இருவரும் தமது முடுக்கியைப் பயன்படுத்தி இலித்தியம், பெரிலியம் ஆகியவற்றை அதிக-ஆற்றல் கொண்ட புரோட்டான்களால் மோதச் செய்தனர். இதன் விளைவாக காமா கதிர்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அவதானித்தது நொதுமிகள் என ஜேம்ஸ் சாட்விக் காட்சிப்படுத்தினார். கொக்குரொஃப்டும் வால்ட்டனும் பின்னர் ஆல்ஃபா துகள்களைப் பெற நினைத்தார்கள். 1932 ஏப்ரல் 14ல், ஆல்ஃபா துகள்களை அவர்கள் கண்டுபிடித்தனர். நேச்சர் இதழில் அவர்கள் முதன் முறையாக செயற்கை முறை அணுக்கரு சிதைவை அறிவித்தார்கள். 3Li + p → 24 2He + 17.2 MeV எர்னெஸ்ட் வால்ட்டன், ப்மார்க் ஒலிபாண்ட் ஆகியோருடன் இணைந்து கொக்ரொஃப்ட்–வால்ட்டன் முடுக்கியை உருவாக்கினார். கொக்ரொஃப்ட்டும் வால்ட்டனும் இணைந்து இக்கருவி மூலம் அணுக்கருவை செயற்கையாகப் பிளக்கும் முறையைக் கண்டுபிடித்தனர். இது அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது. அணுவைப் பிளத்தல் என அழைக்கப்பட்ட இக்கண்டுபிடிப்புக்காக 1938ல் இயூசு விருதும், 1951ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இவர் 1951 ஆம் ஆண்டில் அணுக்கருப் பிளவில் நடத்திய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை எர்னஸ்டு வால்ட்டனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இவர் அணுக்கரு ஆற்றலை உருவாக்குயதில் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கொக்ரொஃப்ட் அறிவியல் ஆய்வு மையத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ரேடார் பற்றி ஆய்வு நடத்தினார். அணுக்கரு ஆயுதங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்களை ஆராய்ந்தார். 1940ல், டிசார்ட் திட்டத்தின் கீழ் பிரித்தானியத் தொழில்நுட்பங்களை அமெரிக்க சகாக்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்திட்டத்தின் விளைவாக போரின் பிற்பகுதியில், வி-1 பறக்கும் வெடிகுண்டுகளைத் தாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்குத் தரப்பட்டன. 1944 மே மாதத்தில் மொண்ட்ரியால் ஆய்வுகூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். போரின் பின், கொக்ரொஃப்ட் அணுவாற்றல் ஆய்வு நிறுவனத்தின் (AERE) இயக்குநராக நியமிக்கப்பட்டார். இங்கு கிளீப் (GLEEP) என்ற மேற்கு ஐரோப்பாவின் முதலாவது அணுக்கரு உலை 1947 ஆகஸ்ட் 15ல் ஆரம்பிக்கப்பட்டது. 1959 முதல் 1967 வரை கேம்பிரிட்ச் சர்ச்சில் கல்லூரியின் முதல் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை கான்பரா ஆஸ்ட்ரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.

அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்கிய சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் செப்டம்பர் 18, 1967ல் தனது 70வது அகவையில் கேம்பிரிட்ஜில் உள்ள சர்ச்சில் கல்லூரியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கேம்பிரிட்ஜில் உள்ள அசென்ஷன் புரியல் மைதானத்தின் பாரிஷில், அவரது மகன் தீமோத்தேயின் அதே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அக்டோபர் 17, 1967 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ஒரு நினைவு சேவை நடைபெற்றது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com