
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது,குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது,
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மூன்று தற்காலிக மருத்துவமனை மற்றும் முகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்காக மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை நகர்நல அலுவலர் குமரகுரு அறிவுரையின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு கொரோனா மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி உருவாக்கப்பட்டுள்ளது,
நோயாளிகளின் சிரமத்தை போக்கும் வகையிலும் தொட்டி கட்டு படுத்தும் வகையிலும் மதுரை மாநகராட்சி ஆணையர் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டு குவியும் வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.