Home செய்திகள் செங்கம் அருகே முப்பெரும் விழா ; அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

செங்கம் அருகே முப்பெரும் விழா ; அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் பாப்பாத்தி அம்மாள் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளை 4ம் ஆண்டு துவக்கவிழா, சாதனையாளர் விருது, மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்றது. ஜமுனாமரத்தூர் வனச்சரகர் குணசேகரன், திருவண்ணாமலை பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் தவச்சாலை வேதபுரி கண்ணப்ப சுவாமிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தயாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறங்காவலர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரமனந்தல் அரசு மேல்நிலை பள்ளியில் 2020-21 கல்வி ஆண்டில் படித்த 10 பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இரண்டு மூன்றாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினார். சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் செந்தில்வேலன் நிகழ்வில் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல் பாடி அனைவரும் அசத்தினார்.பாஜக அமைப்புசாரா மாநில அமைப்பாளர் செந்தில்நாதன் புகழ் ,பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சேட்டு, கடலாடி சர்வா இயற்கை விவசாய பண்ணை கமலக்கண்ணன், ஆகியோர்களுக்கு சேவை பாராட்டி காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் தயாளன் ,ஜமுனாமரத்தூர் வனச்சரகர் குணசேகரன் ,பிரம்மரிஷி விசுவாமித்திரர் தவ சாலை கண்ணப்ப சுவாமிகள் ,செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோமதி ஆகியோர் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்..விழாவில் தண்டராம்பட்டு ஆணையாளர் மகாதேவன், பரமனந்தல் நிர்வாக அலுவலர் முரளி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அருண்குமார், மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், தொண்டு நிறுவன இயக்குனர் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காண பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் அரங்காவலர் சேட்டு நன்றி கூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இமயவர்மன் கிருஷ்ண மதன் பிரகாஷ் அருண் விஜய் ஆகியோர்  செய்திருந்தார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!