Home செய்திகள் மண்மலை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  விழிப்புணர்வு முகாம்

மண்மலை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  விழிப்புணர்வு முகாம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்மண்மலை  கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு  மேல்மண்மலை ஊராட்சி மன்ற தலைவர் தரணி பாலு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.  இந்த முகாமில் கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை |நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.  கால்நடை உதவி மருத்துவர் அருண் தலைமையிலான ஆவின் மருத்துவர் கால்நடை ஆய்வாளர் ரவி செயற்கை முறை கருவூட்டலாளர்  குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் 400 மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள்  அளித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது..சிறந்த கிடரி கன்றுகளுக்கு முதல் மூன்று இடம் பிடித்த விவசாயிகளுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகள்  வழங்கினார். பின்னர் பெண்கள் பேரணி நடைபெற்றது முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்து  மற்றும் வார்டு உறுப்பினர்கள் விக்னேஷ் குமார், கவிதா, கீர்த்தனா, சாந்தி, வாஞ்சிநாதன், மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com