கீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு

கீழக்கரை நகராட்சிக்கு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர் தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப் தேர்வில் மாநில அளவில் எட்டாவது இடத்தை அடைந்து நகராட்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் இரண்டாம் நிலை நகராட்சியில் மூன்றாண்டு காலம் சிறப்பாக பணி புரிந்துள்ளார்.

இவரை மரியாதை நிமித்தமாக கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக நேற்று சட்டப் போராளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், சட்டப் போராளி முஹம்மது அஜிஹர், சட்டப் போராளி பாதுஷா உள்ளிட்டோர் சந்தித்து சால்வை அணிவித்து கீழக்கரை நகரின் பல முக்கிய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது சம்பந்தமாக ஆலோசனை செய்தனர். இதனையடுத்து அதற்கான செயல் திட்டங்களை விரைவில் வகுத்து செயலாற்ற ஆணையர் நாராயணன் பொறுப்பு உறுதி அளித்தார்.

கீழக்கரை நகராட்சியில் புதிதாக பெறுபேற்று இருக்கும் ஆணையர் நாராயணன், இளமை துடிப்புடன் பணியாற்றி நகரை மேம்படுத்த கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.