ஜித்தாவில் சமுதாய கருத்தரங்கம் ..

ஜித்தாவில் 09-03-2018 அன்று மாலை 05.30 முதல் 09.00 மணி வரை சமுதாய கருத்தரங்கம் ஷராஃபியாவில் அமைந்துள்ள லக்கி கஃபேயில் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு காயல் நகர் மக்கள், கடையநல்லூர் தொகுதி மக்கள் மற்றும் காயிதே மில்லத் பேரவை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான தலைமையுரையை பாய்ஸ் வழங்க, சிறப்பு விருந்தினராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் கலந்து கொண்டு இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் உணர்ச்சி மிகு உரையாற்றினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கீழக்கரை சீனி அலி சட்டமன்ற உறுப்பினர் எழுதிய முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினரின் உரை என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் தமுமுக அமைப்பைச் சார்ந்த கீழை இர்ஃபான் மற்றும் காயல் இபுராஹிம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சிறப்பு விருந்தினரை கவுரவப்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான சமூக நல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

#Paid Promotion