Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் முறைகேடு – பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்

கீழக்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் முறைகேடு – பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்

by keelai

கீழக்கரையில் தனியார் கேஸ் ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தரம் மற்றும் எடையில் குறைபாடு உடையதாக இருக்கிறது என்கிற பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து சமூக ஆர்வலர்களால் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து முத்துமாரி பிரின்டர்ஸ் நிறுவனர் சமூக ஆர்வலர் மலை ராஜா நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தெரிவதில்லை.

கீழக்கரை நகரில் பெரும்பாலான சகோதரர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு குறைபாடுடைய சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் போதும் சரி, கூடுதல் தொகையை தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிவோர் வசூலிக்கும் போதும் சரி, அவர்களால் தட்டி கேட்க முடிவதில்லை.

வீடுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய கேஸ் சிலிண்டர்கள் முறைகேடாக வாகனங்களுக்கு பயன்படுத்துவற்காக வாகன ஓட்டிகளிடம் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல நேரம் காலாவதியான சிலிண்டர்களை கூட விநியோகம் செய்து விடுகின்றனர். இது சம்பந்தமாக நாளைய தினம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினருடன் இணைந்து மனு கொடுக்க உள்ளோம். பொதுமக்கள் இது சம்பந்தமாக விழிப்புணர்வு பெற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!