கீழக்கரையில் வோடோபோன் 4G சேவை அறிமுக நிகழ்ச்சி – தனியார் நிறுவனத்தில் கேக் வெட்டி துவக்கம்

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் செயல்படும் SAK கம்யூனிகேஷன் செல்போன் சேவை நிறுவனத்தில் நேற்று முன் தினம் வோடோபோன் 4G சேவை அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சசியில் தொழிலதிபர் சேகு மதார் சாகிபு தலைமையேற்று கேக் வெட்டி வோடோபோன் சேவையை இனிதே துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வோடோபோன் நிறுவனத்தினரும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை SAK கம்யூனிகேஷன் நிறுவனர் ரியாஸ் கான் மற்றும் அமீர் கான் நல்ல முறையில் செய்திருந்தனர்.