கிழக்கு தெரு ஜமாஅத் சுகாதார அமைப்பு சார்பாக சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேனர் – சுத்தம் ஈமானின் ஒரு பகுதி

கீழக்கரை கிழக்கு தெரு ஜமாஅத் சார்பாக நடத்தப்படும் சுகாதார அமைப்பு சார்பாக கிழக்குத் தெருவின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தில் சுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதி என்பதை பகுதி மக்கள் உணர்ந்து செயல்பட்டால் நோய், நொடிகளில் இருந்து விடுபட்டு வாழலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற நல்லதொரு முயற்சியினை அனைத்து ஜமாஅத் அமைப்புகளும் செயலாற்ற முன் வர வேண்டும் என்பது பொதுமக்களின் ஆவலாக இருக்கிறது.