Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நீங்கள் வாங்காத ரேஷன் பொருள்களுக்கு கடைக்காரர் ‘கள்ள கணக்கு’ காட்டுகிறாரா..? கவலை வேண்டாம். – நான் சொல்றத கேளுங்க.. துணை தாசில்தார் தமீம் ராசா தகவல்

நீங்கள் வாங்காத ரேஷன் பொருள்களுக்கு கடைக்காரர் ‘கள்ள கணக்கு’ காட்டுகிறாரா..? கவலை வேண்டாம். – நான் சொல்றத கேளுங்க.. துணை தாசில்தார் தமீம் ராசா தகவல்

by keelai

கீழக்கரை வட்ட வழங்கல் அதிகாரி தமீம் ராசா குடும்ப அட்டைதாரர்களுக்கு பின் வரும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதனை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை வாங்கும் பொதுமக்கள் அவசியம் பின்பற்றுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

நீங்க ரேசன் கார்டு வச்சிருப்பீங்க… ஆனால் ரேசன் பொருள்கள் வாங்காமல் வைத்து இருப்பீங்க. இதனால் உங்கள் ரேசன் பொருள்களை கடைகாரர் பில் போட்டு விற்றதாக கணக்கு அரசுக்கு காட்டி கொண்டிருப்பார். இந்த விபரம் முன்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாது. ஆனால் ‘காகிதமில்லாத பொதுவிநியாக திட்டம்’ (PAPERLESS PDS) திட்டத்தின்படி தற்போது உங்கள் ரேசன் கார்டுக்கு நியாயவிலைக்கடை பொறுப்பாளர் பில் போட்ட உடன் குடும்பஅட்டைதாரர்களுக்கு SMS வரும். இதையும் நீங்க பெருசா எடுத்துக்க மாட்டீங்க.

இதனால் அரசுக்கு மானிய இழப்பு ஏற்படுவதுடன், உங்கள் ரேசன் பொருள், நீங்க வாங்காமலே கள்ளத்தனமாக வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

இதை தடுக்க நீங்களே உங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள்கள் தேவையில்லாத பட்சத்தில் கடைக்காரர்கள் போலி பில்லை போட வாய்ப்பு தராதவகையில் நிறுத்தி வைக்க வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகலாம். அல்லது www.tnpds.com என்ற இணைய தளத்தில், குடும்ப அட்டைதாரர் பக்கம் போய் உங்க மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்க மொபைலுக்கு ஒரு OTP வரும். அதனை பதிவு செய்த உங்கள் கார்டு விவரம் வரும். அதில் விட்டுக்கொடுத்தல் (give it up) தலைப்பில் சென்று பார்த்தால் விவரங்கள் இருக்கும். உங்களுக்கு தேவையில்லாத அத்தியாவசிய பொருள்களை எத்தனை மாதங்களுக்கு வேணும் என்றாலும் நிறுத்தி வைக்கலாம். தேவைப்படும் போது, மேற்கண்ட முறையை பின்பற்றி அத்தியவாசிய பொருள்களை திரும்ப பெறலாம். குடும்பஅட்டைதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதே போல் தாங்கள் ரேசன் அட்டையில் பொருள் வாங்கினால், தங்களது ரேசன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி (mobile) எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வரும். சில சமயங்களில் தாங்கள் பொருட்கள் வாங்காமலேயே குறுஞ்செய்தி (SMS) வரலாம். அப்படி நீங்கள் ரேசன் பொருட்கள் வாங்காமல் பொருள் வாங்கியதாக குறுஞ்செய்தி (SMS) வந்தால், உடனே PDS(space)107 என டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், உடனடியாக சம்மந்தப்பட்ட ரேசன் கடைக்காரர் மேல் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய ரேஷன் கார்டில் ரேஷன் வாங்காமல் வாங்கியதாக SMS வந்தால் PDSspace107 என்று டைப் செய்து இந்த எண்ணிற்கு 9980904040 பண்ணவும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!