தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி 16.07.21 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினம் 1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது. மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம், மாணவ மாணவிகளுக்கான வரைபட விழிப்புணர்வு போட்டிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொகை தின நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி செளந்தர்யா தலைமையில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு. நெடுமாறன், மரு. அருணா (சுகாதாரப் பணிகள்), மரு. இரா. ஜெஸ்லின் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், மரு. கே. ஜி. அனிதா பாலின் குடும்ப நல நோடல் ஆபிஸர் ஆகியோர் முன்னிலையில், அனைத்து செவிலியர்களும் “தன்னம்பிக்கை, தற்சார்பு கொண்ட நம்நாட்டு மக்களுக்கு நெருக்கடி சூழலிலும், குடும்பநல திட்ட சேவைகளை வழங்குவதை உறுதி செய்வோம்” என்ற உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் வரைபட போட்டி, கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 11-07-2021 அன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் மலர் செடிகள் மரு. இரா. ஜெஸ்லின் தலைமையில் நடப்பட்டது.12-07-2021 அன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மரு. அனிதா பாலின் தலைமையில் நடைபெற்றது. 13-07-2021 அன்று தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. 14-07-2021 மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய வரைபட போட்டி மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்கம், செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு மரு. இரா. ஜெஸ்லின், மரு. கே.ஜி. அனிதா பாலின் மற்றும் மரு. எஸ். அகத்தியன் ஆகியோர் தலைமையில் மருத்துவமனை கருத்தரங்கு அரங்கில் நடத்தப்பட்டது. 15-07-2021 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 15-07-2021 கீழப்பாவூர் நாடார் மேல்நிலை பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு மற்றும் ரத்த தான முகாமை மரு. இரா. ஜெஸ்லின் துவக்கி வைத்தார். மேலும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப் போது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..