கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுங்க இலாகா அதிகாரிகள் திடீர் சோதனை….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் காஞ்சனகுடி சாலையில் இன்று (16/07/2021)  இரவில் திடீரென சுங்க இலாகா கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் ஆய்வாளர் ரஜினிஸ் குமார் அதிகாரி, தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர் ஷேக்தாவூத் காவலர் ஸ்ரீராஜ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனை பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது “இரவு நேரங்களில் ஈசிஆர் சாலை வழியாக பல கடத்தல்  செயல்பாடூகளில் ஈடுபடுவதால , அதை கண்காணிக்க இதைப்போல் தினமும் பல இடங்களில் சோதனை செய்து வருகிறோம்” என கூறினார் .