Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது…

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் மற்றும் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்த இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சி இன்று (08/03/2019) காலை 11.30 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்பத் துறைத் தலைவர் P.பிரியங்க வரவேற்புரை வழங்கினார். அத்துடன் கல்லூரி முதல்வர் Dr. A.R. நாதிரா பானு கமால் பெண் இல்லாமல் எந்த துறையும் இயங்காது என்றும் உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும் தாழ்வு மனப்பான்மையை நீக்குமாறும் பெற்றோர்க்கு மரியாதை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழும்மாறும் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் Dr.சாலினி பில்லி கிராகாம் M.A, B.Ed, Ph.D முதல்வர் கிரிஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் பள்ளி, இராமேஸ்வரம். அவர்களுக்கும் P.சுஸ்ரிதா துணை முதல்வர் இராமநாதபுர மாவட்ட சதுரங்க சங்கம் அவர்களுக்கும் K.காளீஸ்வரி தலைமையாசிரியர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி பேராவூர் அவர்களுக்கும் முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன் திருவள்ளூவர் பெண்மையைப் போற்றும் விதத்தையும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக கருத்து சுதந்திரம் பெற்று திகழும்மாறும் P.சுஸ்ரிதா கூறினார். மேலும் நன்மை ஆவதும் பெண்ணால் தீமை அழிவதும் பெண்ணால் என்று K.காளீஸ்வரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினர் Dr.சாலினி பில்லி கிராகாம் அவர்கள் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பெண் என்ற அனுபவத்தையும் பெண் என்பவளின் அழகு என்பது அறிவு என்றும் பெண்கள் அனைவருக்கும் முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். அத்துடன் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் சார்பாக கல்லூரி முதல்வர்க்கும், சிறப்பு விருந்தினர்க்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.

மேலும் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவிகள் ஆசிரியர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ரெட்கிராஸ் செயலாளர் M.ராக்லண்ட் மாதுரம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.வள்ளி விநாயகம் புரவலர் M.தேவி உலகராஜ் உறுப்பினர் I.தமிழரசன்  முன்னிலையில் நடைப்பெற்றது. இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி D.நாகஜோதி நன்றியுரை நல்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!