இராமநாதபுரம் மாவட்ட மக்கள் சார்பில் சர்வதேச மகளிர் தின பொதுக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. தமிழக பெண்கள் கூட்டமைப்பு துணைத் தலைவி என்.ராமலட்சுமி தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியத் தலைவி ஜெ. ஆரோக்கிய புனிதா வரவேற்றார்.
வழக்கறிஞர் பி.காயத்ரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில முன்னாள் துணைத் தலைவர் டி.ராஜேஸ்வரி, தேனி தேன் சுடர் பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி வி.கருத்தம்மாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ், சிவகங்கை பல்நோக்கு சேவா சங்க பரமக்குடி கிளை செயலாளர் எம்.ஜெபமாலை சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட மக்கள் அமைப்பு பொருளாளர் கே.ரூபி நன்றி கூறினார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
You must be logged in to post a comment.